அடி வாங்கும் மகிழ்ச்சியில்
துடிப்பறையின் கண்முகம் மகிழ்ந்து ஒலிப்பது போல
போரில் பட்ட காயத்தின் வலியில் மகிழ்ச்சி அடைந்து
கரந்தை வீரன் கூத்தாடுதல்
"பிள்ளைத் தெளிவு"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
மேவார் உயிர் உணங்க மேல் முடித்த பிள்ளையன்
பூ வாள் உறை கழியாப் போர்க்களத்து - ஓவான்
துடி இரட்டி விம்மத் தொடு கழலார் முன் நின்று
அடி இரட்டித்து ஆடும் ஆட்டு
அவன் பிள்ளை. பகைவர் உயிரை மீன் உணங்கல் கருவாடு போலக் காய வைத்த பிள்ளை. போர்களத்தில் தன் வாளை உறையிலிருந்து எடுத்தான். அதனைச் சுழற்றிக்கொண்டு விளையாடினான். துடி அடிக்கும் ஒலிக்கேற்பத் தப்படி வைத்து வாள்-போர் செய்தான். இந்த ஆட்டமே ஆட்டம். அவன் ஆடியதே பிள்ளைத் தெளிவு.
No comments:
Post a Comment