எதிர்த்துப் போரிடும் வெட்சி மறவரைக்
கரந்தை வீரன் வெட்டி வீழ்த்திப் போரிடுதல்
"ஆளெறி பிள்ளை"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
பிள்ளை கடுப்பப் பிணம் பிறங்க வாள் எறிந்து
கொள்ளை கொள் ஆயம் தலைக்கொண்டார் - எள்ளிப்
பொருது அழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒரு தனியே நின்றான் உளன்.
அவன் பூங்கழலான். பயம் அறியாப் பிள்ளை போல வாள் வீசிப் போரிட்டான். வெட்சியார் கைப்பற்றிய ஆனிரைகளை மீட்டுக்கொண்டான். மீட்டுக்கொண்டவர் ஆனிரைகளோடு சென்றுவிட்டனர். பூங்கழலான் மட்டும் திரும்பிச் செல்லவில்லை. தனி ஒருவனாக நின்று வெட்சியாளரோடு போரிட்டுக்கண்டே நின்றான். இவன் ஆளெறி பிள்ளை
No comments:
Post a Comment