Pages

Thursday, 5 June 2025

போர் மலைதல் 2-4

ஆனிரை கவர்ந்து செல்லும் வெட்சியாரைக் கண்டு 
அவர்கள் அஞ்சும்படி 
அவர்களோடு போரிடுதல் 
"போர் மலைதல்" 
என்னும் போர்த்துறை ஆகும். 
இதனைக் கூறும் பாடல்:

புலிக் கணமும் சீயமும் போர்க் களிறும் போல்வார் 
வலிச் சினமும் மானமும் தேசும் - ஒலிக்கும் 
அரு முனை வெம் சுரத்தான் பூசல் கோடிச்
செரு மலைந்தார் சீற்றம் சிறந்து 

புலிக்கூட்டம், சிங்கம், போரிடும் யானை போன்று சென்றனர். சினம், மான உணர்வு கொண்டவராய், தம் புகழை எண்ணி, வெட்சியாளரோடு போரிட்டனர். சுரத்தில் (வறண்ட நிலத்தில்) போர் நடந்தது. 

கரந்தைப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment