போரிட முடியாதவரை விட்டுவிட்டுப்
போர் மறவர்
ஆனிரை கவர்ந்து சென்றோர் வழியில்
ஆனிரைகளை மீட்கச் செல்வது
"அதரிடைச் செலவு"
என்னும் போர்த்துறை ஆகும்
சங்கும் கரும் கோடும் தாழ் பீலிப் பல்லியமும்
ஒங்கும் பறையோடு எழுந்து ஆர்ப்ப - வெங்கல்
அழல் சுரம் தாம் படர்ந்தார் ஆன் சுவட்டின் மேலே
நிழல் கதிர் வேல் மின்ன நிரைத்து.
சங்கு, கருநிற ஊதுகொம்பு, மயில் பீலி கட்டிய பல இசைக்கருவுகள், பறை முதலானவை முழங்கின. சுடும் கற்கள் உள்ள, அனல் பறக்கும் காட்டு வழியில் சென்றனர். தம் ஆனிரைகள் சென்ற காலடிச் சுவடுகளைப் பார்த்துக்கொண்டு அவை சென்ற வழியில், அவற்றை மீட்கச் சென்றனர். அவர்களின் வேல் நிழலிலும் மின்னிற்று. வேல் வீரர்கள் நிரையாக / வரிசையாகச் சென்றனர்.
No comments:
Post a Comment