பகைவர் பசுக்களைக் கவர்ந்து சென்றது கேட்டுப்
பசுக்களின் உடைமையாளர்
தாம் செய்துகொண்டிருந்த செயலை விட்டுவிட்டு
ஒன்றுகூடும் செய்தியைக் கூறுவது
"கரந்தையரவம்"
என்னும் போர்த்துறை ஆகும்.
காலார் கழலார் கடும் சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப் பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரை பெயர்வும் உண்டு.
காலில் வீரக்கழல் அணிந்தவர் வெறுப்பு தரும் தோற்றத்தோடு வில்லும் வேலும் வைத்துக்கொண்டு எமனைப் போல் தோன்றி ஆனிரை கவரும் கிணை முழக்கம் கேட்டு ஒன்று திரண்டு தாக்கி, ஆனிரைகளின் உடைமையாளர், கவர்வோரைத் தாக்கி மீட்டுக்கொள்வதும் உண்டு.
- (கிளர்ந்து ஆலும் - கிளர்ந்தெழுந்து செய்யும் ஆரவாரம்)
- (உளர்ந்தார் - வேதனைப்பட்டார்)
No comments:
Post a Comment