உலகில் புகழை நிறுத்திக்கொண்டு
போரில் பட்ட புண்ணோடு இல்லம் வருதல்
"புண்ணொடு வருதல்"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
வெம் குருதி மல்க விழுப்புண் உகுதொறூஉம்
இங்குலிகம் சோரும் வரை ஏய்க்கும் - பைங்கண்
இனம் போக்கி நின்றார் இகல் வாட்டி வேந்தன்
மனம் போல வந்த மகன்.
வேந்தன் வெற்றியையே விரும்புவான். அவன் மனம் போல அந்த மகன் திரும்பினான். கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டுக்கொண்டு திரும்பினான். அவன் உடம்பில் விழுப்புண். உடம்பெல்லாம் குருதி வழிந்துகொண்டிருந்தது. குங்குமம் வழியும் மலை போல அவன் காணப்பட்டான்.
No comments:
Post a Comment