எண்ணிய செயல் நிறைவேற மகளிர் வேலனோடு சேர்ந்து வெறியாட்டம் போட்டுக்கொண்டு வள்ளிக்கூத்து ஆடுவது "வெறியாட்டு" என்னும் போர்த்துறை.
இதனை விளக்கும் பாடல்:
காணில் அரனும் களிக்கும் கழல் மறவன்
பூண் இலங்கும் மென் முலைப் போது அரிக் கண் - வாணுதல்
தான் முருகு மெய்ந்நிறீஇ தாமம் புறம் திளைப்ப
வேல் முருகற்கு ஆடும் வெறி.
மறவன் மகள் வாணுதல் வெறி ஆடுவாள்வேல் முருகனை வேண்டிக்கொண்டு ஆடுவாள்அவள் பூண் அணிந்த முலை கொண்டவள்தாமரை மொட்டு போன்று அரிக்கண் கொண்டவள் (அரி = வரி)அவள் ஆடும்போது அவள் உடம்பில் முருகன் ஏறியிருப்பான்.
இதனைக் கண்டால் சிவனும் களிப்படைவான்.
No comments:
Post a Comment