Pages

Wednesday, 4 June 2025

கொற்றவை நிலை 1-20

கொற்றவை ஒளியில் திகழ்பவள் 
வெற்றி தருபவள்
அவள் அருளைப் போற்றுவது 
"கொற்றவை நிலை" என்னும் போர்த்துறை
இதற்குப் பாடல்:

ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி மலிபடைக் கொற்றவை - மீளி
அரண் முருங்க ஆ கோள் கருதின் அடையார்
முரண் முருங்கத் தான் முந்துறும் 

சிங்கக் கொடி, கையில் பச்சைக்கிளி, பாயும் மான் கொண்டவள் கொற்றவை. கூளிப் பேய் அவளுக்குப் படை. அவள் கொற்றவை. (கொற்றம் / வெற்றி தருபவள்) ஆனிரை கவர வேண்டும் என்று மீளி (மறவன்) கருதினால், அவனது பகைவர் அழியும் வகையில், அவனுக்குத் துணையாக,  அவன் முன்னே நிற்கும்.  

வெட்சிப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment