போர்க்களத்தில் துடி முழக்குபவனைப் பாராட்டிக் கூறுவது
"துடிநிலை" என்னும் போர்த்துறை.
இதனைக் கூறும் பாடல்:
முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர்
எந்தைக்குத் தந்தை இவன் எனக்கு - வந்த
குடியொடு கோடா மரபினோர்க்கு இன்னும்
வடியுறு தீந்தேறல் வாக்கு.
என் பாட்டனின் பாட்டனுக்கு இவனுடைய பாட்டனின் பாட்டன் துடி முழக்கினான். என் தந்தைக்கு இவன் தந்தை துடி முழக்கினான். இவன் எனக்குத் துடி முழக்குகிறான். இப்படி என் மரபினோர்க்கு இவன் மரபினோர் போர்க்களத்தில் துடி முழக்குகின்றனர். ஆதலால் இவனுக்கு இனிக்கும் தேறல் கள்ளை வார்த்துக் கொடு.
No comments:
Post a Comment