புள் நிமித்தம் சொன்னவர்க்கு,
குறை ஏதும் இல்லாமல் பசுக்களைக் கொடுத்தல்
"பிள்ளை வழக்கு" என்னும் போர்த்துறை.
இதனைக் கூறும் பாடல்:
புல்லார் நிரை கருதி யாம் செல்லப் புள் நலம்
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச் - சொல்லால்
கடம் சுட்ட வேண்டா கடும் சுரை ஆன் நான்கு
குடம் சுட்டு இனத்தால் கொடு.
பலரும் தெரிந்துகொள்ளுமாறு பறவைகளின் நிலைமையைக் கணித்துப் புள்-சகுனம் சொன்னவர்க்குக் கொடுத்தல் கடமை என்று சுட்டிக்காட்ட வேண்டுவதில்லை. நாலு குடம் பால் கறக்கும் பசுவைத் தருதல் வேண்டும்.
No comments:
Post a Comment