வேற்றுப் புல நிலைமையை அறிந்து சொன்னவர்க்குத் தன் பங்கைக் காட்டிலும் அதிகமாகப் பசுக்களைப் பங்கிட்டுத் தருதல் "புலனறி சிறப்பு" என்னும் போர்த்துறை
இதனைச் சொல்லும் பாடல்:
இறு முறை எண்ணாது இரவும் பகலும்
செறு முனையில் சென்று அறிந்து வந்தார் - பெறும் முறையின்
அட்டுக் கனலும் அயில் வேலோய் ஒன்று இரண்டு
இட்டுக் கொடுத்தல் இயல்பு.
தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இரவிலும் பகலிலும் போரிடும் எதிராளியிடம் சென்று அவர் நிலைமையை அறிந்து வந்து சொன்னவர்க்கு அரசன் ஒன்றிரண்டு பசுக்களைக் கூட்டித் தருதல் இயல்புதான்.
No comments:
Post a Comment