போருக்கு உதவியவர்களுக்கு வழங்கிய பின்னர்
மீதமுள்ள பசுக்களையும்
கேட்டவர்களுக்குக் கொடுத்தல்
"கொடை" என்னும் போர்த்துறை ஆகும்.
இதனைத் தெரிவிக்கும் பாடல்
அங்கண் கிணையன் துடியன் விறலி பாண்
வெங்கட்கு வீசும் விலை ஆகும் - செங்கண்
செருச் சிலையா மன்னர் செரு முனையில் சீறி
வரிச் சிலையால் தந்த வளம்.
சினந்து வில் கொண்டு போரிட்ட மன்னரை வென்று கொண்டுவந்த பசுக்களை வேறு வகையில் உதவிய கிணையன், துடியன், விறலி, பாணன், கள் தந்தவர் போன்றோருக்கும் அவர்களின் உதவிக்கு விலையாகத் தரப்படும்.
No comments:
Post a Comment