ஒரு பாடலில் ஒன்றை மட்டும் உருவகம் செய்து பிறவற்றை உருவகம் செய்யாமல் கூறுதல் ஏகாங்க உருவகம் (ஓர் அங்க உருவகம்)
காதலனைத் தா என்று உலவும் கரு நெடுங்கண்
ஏதிலனால் யாது என்றும் இன் மொழிந்தேன் - மாதர்
மருண்ட மன மகிழ்ச்சி வாள் முகத்து வந்த
இரண்டினுக்கும் என் செய்கோ யான்
காதலனைத் தா என்று கரு நெடுங்கண் உலவும்
காதலன் அல்லாத ஏதிலனால் என்ன பயன் என்று என் வாய் உளறுகிறது
இது இன் மொழி
இது பெண்ணுக்குத் தோன்றிய மருண்ட மன மகிழ்ச்சி
கண் உலவுகிறது
வாய் உளறுகிறது
இரண்டும் வாள் முகத்து வந்தவை
என்ன செய்வேன்
அவள் தோழியிடம் சொல்கிறாள்
இதில் இன்மொழி என்பதில் மட்டும் உருவகம் உள்ளது
(இனிமையாகிய மொழி) [உருவகம்]
எனவே ஏகாங்க உருவகம்
தண்டியலங்காரம் PDF பக்கம் 92 | நூல் பக்கம் 66
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment