Pages

Tuesday, 27 May 2025

தண்டியலங்காரம் - அநேகாங்க உருவகம்

பல உறுப்புகளை உருவகம் செய்வது ஆநேகாங்க உருவகம்

கைத் தளிரால் கொங்கை முகிழ் தாங்கிக் கண் என்னும் 
மைத் தடம் சேல் மைந்தர் மனம் கலங்க - வைத்தது ஓர்
மின் உளதால் மேகம் மிசை உளதால் மற்று அதுவும்
என் உளதாம் நண்பா இனி

கை - தளிர்
கொங்கை - கோங்கின் அரும்பு
கண் - சேல் 
இவற்றை வைத்துக்கொண்டு ஒரு மின்னல் உள்ளது
மைந்தர் மனத்தைக் கலக்கும் மின்னல் உள்ளது
மேகத்தின் மேல் (கூந்தலில் தோன்றும் முகம்) மின்னல் உள்ளது
அதுவும் என் உள்ளத்தில் இருக்கிறது

நண்பா
என்ன செய்யலாம்

தண்டியலங்காரம் PDF பக்கம் 93 | நூல் பக்கம் 66
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு 

No comments:

Post a Comment