எல்லாப் பொருள்களையும் உருவகம் செய்வது முற்று உருவகம்
விழியை களி வண்டு மெல் நகையே தாது
மொழியே முருகு உலாம் தேறல் - பொழிகின்ற
தேம் மருவு கோதைத் தெரிவை திருமுகமே
தாமரை என் உள்ளத் தடத்து
அவன் உள்ளம் - தடம் (குளம்)
அதில் அவள் இருக்கிறாள்
அவள் விழி - வண்டு
அவள் புன்னகை - பூந்தாது
அவள் மொழி - மணக்கும் தேன் [முருகு உலவும் தேறல்]
அவள் முகம் - தாமரை
அவள் தேம் மருவு கோதைத் தெரிவை
(தேன் இருக்கும் பூமாலை ஆகிய தெரிவைப் பருவத்தவள்)
தண்டியலங்காரம் PDF பக்கம் 93 | நூல் பக்கம் 66
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment