உறுப்புகள் பலவற்றையும், உறுப்புகளைக் கொண்டுள்ள பொருளையும் உருவகம் செய்வது அநேகாங்க உருவகம். உறுப்புகளைக் கொண்டுள்ள பொருளை உருவகம் செய்யாமல் உறுப்புகளை மட்டும் உருவகம் செய்வது அவயவ உருவகம்.
பாடல்
புருவச் சிலை குனித்துக் கண் அம்பு என் உள்ளத்துஉருவத் துரந்தார் ஒருவர் - அருவிபொரும் கல் சிலம்பில் புனை அல்குல் தேர் மேல்மருங்குல் கொடி நுடங்க வந்து.
செய்தி
புருவம் - வில். அந்த வில்லை அவள் வளைத்தாள்கண் - அம்பு. அந்த அம்பை அவள் எய்தாள்அது என் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்ததுஅந்த இடம் அருவி பாயும் கல் மலைஅவள் அல்குல் தேர் மேல் வந்தாள்அப்போது இடையாகிய கொடி வளைந்து ஆடிற்றுதலைவன் தலைவியைப் பற்றிப் பாங்கனிடம் இவ்வாறு கூறுகிறான்.
உருவகம்
இதில் தலைவியின் உறுப்புகள் உருவகம் செய்யப்பட்டுள்ளன. தலைவி உருவகம் செய்யப்படவில்லை. எனவே இது அவயவ உருவகம். (உறுப்பு உருவகம்)
தண்டியலங்காரம் PDF பக்கம் 93 | நூல் பக்கம் 66
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment