முதலை உருவகம் செய்து
அதன் உறுப்புகளை உருவகம் செய்யாமல்
விடுவது அவயவி உருவக அணி
பாடல் - எடுத்துக்காட்டு
வார் புருவம் கூத்து ஆட வாய் மழலை சேர்ந்து அசையவேர் அரும்பச் சேர்ந்து விழி மதர்ப்ப - மூரல்அளிக்கும் தெரிவை வதனாம்புயத்தால்களிக்கும் தவம் உடையேன் கண்.
அணி விளக்கம்
வதனம் அம்புயம் - வதனாம்புயம்முகம் தாமரையாக உருவகம் செய்யப்பட்டுள்ளதுமுகத்தில் உள்ள புருவம், வாய், வியர்வை ஆகியவைஉருவகம் செய்யாமல் கூறப்பட்டுள்ளன.எனவே இது அவயவி உருவகம்
செய்தி
அவள் முகத் தாமரையில் உள்ளநீண்ட புருவம் கூத்தாடுகிறதுவாய் மழலைச் சொற்களை அசை போடுகிறதுமுகத்தில் வியர்வை அரும்புகிறதுவிழி மருண்டு பார்க்கிறதுதெரிவையின் தாமரை முகமே மலர்ந்து சிரிக்கிறதுஇவற்றைக் கண்ணால் கண்டு களிக்க நான் தவம் செய்திருக்கிறேன்
தலைவன் தன் பாங்கனிடம் சொல்கிறான்
தண்டியலங்காரம் PDF பக்கம் 94 | நூல் பக்கம் 66
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment