கன்னி தன் கொங்கைக் குவடாம் கடாக் களிற்றைப்
பொன் நெடுந்தோள் குன்றே புனை கந்தா - மன்னவ நின்
ஆகத் தடம் சேவகம் ஆக யான் அணைப்பல்
சோதித்து அருளேல் துவண்டு.
பாங்கன் தலைவனிடம் சொல்கிறான்.
மன்னவ!
உன் காதல் கன்னியின் கொங்கை முகடாகிய கடாக் களிறு
பொன் போன்ற உன் தோள் குன்றை அணக்கும் துணையாக்கி
உனக்குச் சேவகம் செய்வேன்
என்னை நீ சோதிக்க வேண்டாம்.
முலை மலைக்குவடு
அவன் தோள் குன்று
குவட்டைக் குன்று அணைத்தல்
முலையைத் தோள் அணைத்தல்
இப்படி உருவகத்தில் உருவகம்
இதுதான் உருவக உருவகம்
தண்டியலங்காரம் PDF பக்கம் 92 | நூல் பக்கம் 66
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment