நன்மை செய்யும் பொருள்
தீமை செய்வதற்குக் காரணம் காட்டுவது
சமாதான உருவகம்
கை காந்தள் வாய் குமுதம் கண் நெய்தல் காரிகையீர்
மெய் வார் தளிர் கொங்கை மென் கோங்கம் - இவ்வனைத்தும்
வன்மை சேர்ந்து ஆவி வருத்துவது மா தவம் ஒன்று
இன்மையே அன்றோ எமக்கு
அழகியே! உன்
கை காந்தள் மலர்
வாய் செவ்வாம்பல் மலர்
கண் நெய்தல் மலர்
தளிர் போன்ற கொங்கை கோங்க மலர்
மலரில் வன்மை சேர்ந்து என் ஆவியை வருத்துவது உன்னை அடைய நான் தவம் செய்யாமையே அல்லவா
தண்டியலங்காரம் PDF பக்கம் 91 | நூல் பக்கம் 66
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment