Pages

Monday, 26 May 2025

தண்டியலங்காரம் - விரூபக உருவகம்

விரூபகம் என்பது, ஒன்றன் தோற்றத்தில், மற்றொன்றின் ஒரு பகுதியை மட்டும் வைத்து உருவகம் கூறுவதாகும். இந்தப் பாடலில் பெண்ணின் முகம் தாமரை மலராக உருவகம் செய்யப்பட்டுள்ளது. தாமரைக்கு இவள் முகம் போன்ற பாங்குகளில் சில இல்லை என்கிறது. அதனால் இது விரூபக உருவகம். 

தண் மதிக்குத் தோலாது தாழ் தடத்து வைகாது 
முள் மருவும் தாள் மேல் முகிழாது - நண்ணி
இரு பொழுதும் செவ்வி இயல்பாய் மலரும் 
அரிவை வதனாம்புயம்

வதனாம்புயம் (வதனம் + அம்புயம்) / முகத்தாமரை

தாமரை நிலா வந்ததும் தன் அழகை இழந்து தோற்றுப் போகும்.
இவள் முகம் மறுவுள்ள மதியத்தை வெல்லும்.

தாமரை நீரில் இருக்கும் 
இவள் நிலத்தில் இருக்கிறாள் 

தாமரைத் தண்டில் முள் இருக்கும்.
இவள் உடம்பில் முள் இல்லை 

இப்படிச் சொல்வதால் இந்தப் பாடல் விரூபக உருவகம்.

தண்டியலங்காரம் PDF பக்கம் 91 | நூல் பக்கம் 66
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment