விரி கடல் சூழ் மேதினி நான்முகன் மீகான் ஆகச்
சுர நதி பாய் உச்சி தொடுத்த - அரி திருத் தாள்
கூம்பாக எப் பொருளும் கொண்ட பெரு நாவாய்
ஆம் பொலிவிற்று ஆயினதால் இன்று
- இப் பாடலில் உலகம் நாவாய் என்னும் கப்பலாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.
- நான்முகன் நாவாய் செலுத்தும் மீகாமன்.
- திருமால் தன் கால் தப்படியால் அளந்த வானுலகக் கங்கை (சுரந்தி) நாவாயின் கூம்பு
- இப்படி அந்த நாவாய்க்கப்பல் பொலிவுற்று விளங்குகிறது.
உலகம் என்னும் கப்பல் பிரமன், திருமால், வானுலகக் கங்கை முதலான சிறந்த பொருள்களாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இது சிறப்பு உருவகம்.
மீண்டும் ஒரு சிறப்பு உருவகம் வருகிறது. அதில் திருமகள் போன்ற ஒருத்தி அமுதம் போன்ற சிறந்நத பொருள்களாக உருவகம் செய்யப்பட்டுள்ளாள்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 90 | நூல் பக்கம் 65
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment