Pages

Monday, 26 May 2025

தண்டியலங்காரம் - வியனிலை உருவகம்

செவ்வாய் நகை அரும்பச் செங்கைத் தளிர் விளங்க
மைவாள் நெடுங்கண் மதர்த்து உலவச் - செவ்வி
நறவு அலரும்  சோலை வாய் நின்றதே நண்பா
குறவர் மடமகளாம்  கொம்பு

நண்பா
அவள் குரவர் மகள்
மடப்பத் தன்மை உடைய கொம்பு
அவள் செவ்வாயில் நகை அரும்புகிறது
கை தளிரின் மென்மை விளங்குகிறது
நீண்ட கண் கருகருத்த வாளாக மதர்ப்புடன் (பெருமிதத்துடன்) உலாவுகிறது
தேன் பூக்கும்  சோலையில் அவள் நிற்கிறாள்
அந்தப் பூக் கொம்பு  நிற்கிறது

  • வியம் என்னும் ஒன்று (ஒற்றை) எண்ணைக் குறிக்கும்
  • "வியம் எல்லாம் பாலை" (அகநானூற்றில் ஒற்றை எண் கொண்ட பாடல்கள் எல்லாம் பாலைத்திணைப் பாடல்கள்) என்னும்போது வியம் என்னும் சொல் ஒற்றை என்னும் பொருளைத் தருவதைக் காணலாம்.
  • இங்குக் கண் ஒன்று மட்டும் வாளாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இது வியனிலை உருவகம்
 

தண்டியலங்காரம் PDF பக்கம் 90 | நூல் பக்கம் 65
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment