Pages

Monday, 26 May 2025

தண்டியலங்காரம் - இயைபிலி உருவகம்

தேன் நக்கு அலர் கொன்றை பொன் ஆகச் செஞ்சடையே
கூனல் பவளக் கொடியாகத் - தான
மழையாகக் கோடு மதியாகத் தோன்றும் 
புழையார் தடக்கைப் பொருப்பு  

துளை கொண்ட பெரிய கையை உடைய மலையாகிய  பிள்ளையாராகிய யானை
தேன் சிரிக்கும் கொன்றையைப் பொன்னாகவும் 
செஞ்சடையைப் பவளக் கொடியாகவும் 
வளைந்த தந்தக் கொம்பு பிறைநிலாவாகவம் 
கொண்டு விளங்குகின்றது. 

இவற்றில் பொன், பவளக்கொடி, பிறைநிலா ஆகியவை இணைப்புத் தொடர்பு இல்லாத உருவகங்கள் ஆதலால் இது இயைபிலி உருவகம்.

தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு 

No comments:

Post a Comment