Pages

Monday, 26 May 2025

தண்டியலங்காரம் - இயைபு உருவகம்

செவ்வாய்த் தளிரும் நகை முகிழும் கண் மலரும்
மை வார் அளக மதுகரமும் - செவ்வி
உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்து வைத்தார் 
துடைத்தாரே அன்றோ துயர்

பாடலின் பொருள்

அவர் (மால்) தன் 
செவ்வாயாகிய தளிரையும்
புன்னகை என்னும் அரும்பையும்
பார்வை மலரையும்
கூந்தலைச் சுற்றும் வண்டுகளையும் 
என் உள்ளத்தில் நிலைக்கும்படி வைத்திருக்கிறார்
அதனால் என் துயரத்தைப் போக்கினார்

தளிர், அரும்பு, மலர், வண்டு ஆகிவை ஒன்றோடொன்று இயைபு உடையவை. எனவே இது இயைபு உருவகம். 

தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment