வையம் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் தனக்கே சூட்டினேன் சொல் மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
வையம் விளக்கின் அகல்
கடல் நீர் நெய்
கதிரவன் விளக்கின் சுடர்
சக்கரம் ஏந்திய திருமாலுக்கு இப்படி விளக்கு ஏற்றினேன்
எதற்கு
என் துன்பக் கடல் நீங்க வேண்டும் என்பதற்காக
வையம் தகழியா
வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக
இவை விரி உருவகம்
சுடர் ஆழியான்
இடர் ஆழி
ஆகியவை தொகை உருவகம்
இப்படி இரண்டு உருவகங்களும் வந்ததால் இப்பாடல் தொகைவிரி உருவகம்
தண்டியலங்காரம் PDF பக்கம் 88
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment