Pages

Sunday, 25 May 2025

தண்டியலங்காரம் - விரி உருவகம்

பெயரெச்ச வாய்பாட்டில் ஆகிய என்னும்  சொல்லும்
வினையெச்ச வாய்பாட்டில் ஆக என்னும் சொல்லும்
உருவக உருபாக வரும்
இவை விரிந்து வரின்
விரி உருவகம்

மறைந்து வரின் தொகை உருவகம்

கொங்கை முகையாக மென் மருங்குல் கொம்பாக
அங்கை மலரா அடி தளிராத் - திங்கள்
அளி நின்ற மூரல் அணங்கு ஆம் எனக்கு 
வெளி நின்ற வேனில் திரு

கொங்கை மொட்டு ஆகவும்
இடை கொம்பு ஆகவும்
கை மலர் ஆகவும் 
கால் அடி தளிர் ஆகவும் 
நிலா போல குளுமை தரும் சிரிப்பு வருத்தும் பெண் தெய்வம் ஆகவும் 
அந்தத் திருமகள் எனக்கு வெளியில் உலவும் இளவேனிலாக இருக்கிறாள்.

தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment