இந்தப் பாடல் ஆக என்னும்
உருவக உருபு
தொக்கு (மறைந்து) வந்த உருவகம்
இது தொகையுருவகம்
அங்கை மலரும் அடித் தளிரும் கண் வண்டும்
கொங்கை முகிழும் குழல் காரும் - தங்கியது ஓர்
மாதர் கொடி உளதால் அன்பா அதற்கு எழுந்த
காதற்கு உளதோ கரை
கையாகிய தாமரை மலர்
அடியாகிய மாந்தளிர்
கண்ணாகிய வண்டு
கொங்கை ஆகிய மொட்டு
கூந்தல் ஆகிய கார்முகில்
இவற்றைத் தாங்கிக்கொண்டு
மாதர் என்னும் கொடி உள்ளது.
நண்பா
அந்தக் கொடியை அடைய எனக்குத் தோன்றிய காதலுக்குத்தான் கரை இல்லலை.
தலைவன் பாங்கனிடம் சொல்கிறான்
தண்டியலங்காரம் PDF பக்கம் 87
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment