Pages

Saturday, 31 May 2025

இடைநிலைச் சாதித் தீவகம்

சாதிச் சொல் பாடலின் இடையில் நின்று பிறவற்றோடு சேர்ந்து பொருள் தருவது இடைநிலைச் சாதித் தீவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

கா மருவு பொற்றொடியாம் காலில் கழலாம்
பொருவில் புய வலயம் ஆகும் - அரவு அரை மேல்
நாணாம் அரற்கு நகை மணி சேர் தாழ் குழையாம்
பூணாம் புனை மாலையாம்

பாடல் - செய்தி

நம்மைக் காப்பாற்றும் அரனுக்கு
அரவு கையில் தொடி
அரவு காலில் கழல்
அரவு புயத்தில் வலயம் 
அரவு இடுப்பில் நாண்
அரவு காதில் குழை
அரவு கழுத்தில் பூண். புனையும் மாலை 

குறிப்பு

பாடலில் அரவு என்னும் விலங்கினச் சொல் பாடலின் இடையே நின்று மற்றவற்றோடு இணைந்து பொருள் தருவதால் இது  இடைநிலைச் சாதித் தீவகம்

தண்டியலங்காரம் PDF பக்கம் 107 | நூல் பக்கம் 82
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment