Pages

Saturday, 31 May 2025

இடைநிலைப் பொருள் தீவகம்

பொருட்பெயர் ஒன்று பாடலின் இடையில் நின்று மற்றவற்றோடு சேர்ந்து பொருள் தருவது இடைநிலைப் பொருள் தீவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

மான் அமரும் கண்ணாள் மணி வயிற்றில் வந்து உதித்தான்
தானவரை வென்றும் தலையளித்தான் - யானைமுகன்
ஓட்டினான் வெம் கலியை உள்ளத்து இனிது அமர்ந்து
வீட்டினான் நம் மேல் வினை

பாடல் - செய்தி

  • ஆனைமுகன் மான் விரும்பும் கண்ணாள் உமை வயிற்றில் வந்து தோன்றினான் 
  • ஆனைமுகன் அரக்கரை வென்று காப்பாற்றினான்
  • ஆனைமுகன் துன்பம் தரும் கலியை ஓட்டினான்
  • ஆனைமுகன் நம் உள்ளத்தில் இன்பம் தந்து நம் பழ வினைத் தாக்கத்தைப் போக்கினான்

குறிப்பு

யானைமுகன் என்பது ஒரு பொருளின் பெயர். 
அது பாடலின் இடையில் நிற்கிறது
மற்றவற்றோடு சேர்ந்து பொருள் விளக்கம் தருகிறது
இப்படித் தருவது இடைநிலைப் பொருள் தீவகம்

தண்டியலங்காரம் PDF பக்கம் 108 | நூல் பக்கம் 83
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment