தொழிற்சொல் பாடலின் நடுவில் நின்று பலவற்றோடு பொருந்துதல் இடைநிலைத் தொழில் தீவகம்
பாடல் - எடுத்துக்காட்டு
எடுக்கும் சிலை நின்று எதிர்த்தவரும் கேளும்வடுக் கொண்டு உரம் துணிய வாளி - தொடுக்கும்கொடையும் திரு அருளும் கோடாத செங்கோல்நடையும் பெரும் புலவர் நா
பாடல் - செய்தி
- அவன் வில்லைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான்.
- அவனை எதிர்த்தவரும், எதிர்த்தவரின் உறவினர்களும் வடு ஆகும்படிப் பெரும்புண் பட்டனர்
- நெஞ்சில் வாள் வெட்டுப் பட்டனர்
- இதனைப் புலவர் நாக்கு பாடலாகத் தொடுக்கும்.
- அவன் கொடையைப் பாடலாகத் தொடுக்கும்.
- அவன் திருவைப் பாடலாகத் தொடுக்கும்.
- அவன் அருளைப் பாடலாகத் தொடுக்கும்.
- அவன் கோடாத செங்கோலைப் பாடலாகத் தொடுக்கும்.
- அவன் நன்னடத்தையைப் பாடலாகத் தொடுக்கும்.
குறிப்பு
இப்படிப் பாடலின் இடையில் உள்ள தொடுக்கும் என்னும் தொழிற்சொல் பலவற்றுக்குத் தீவகமாக நிற்பதால் இது இடைநிலைத் தொழில் தீவகம்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 107 | நூல் பக்கம் 82
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment