பாடலின் இடையில் நிற்கும் சொல் வேறு பல சொற்களுக்குத் துணைநிற்பது இடைநிலைக் குணத் தீவக அணி
பாடல் - எடுத்துக்காட்டு
எடுத்த நிரை கொணா என்றலுமே வென்றிவடித்து இலங்கு வை வாளை வாங்கத் - துடித்தனவேதண் ஆர மார்பும் தடம் தோளும் வேல் விழியும்எண்ணாத மன்னர்க்கு இடம்
பாடல் - செய்தி
- பகைவர் கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டுக்கொண்டு வா என்று சொன்னதும், முன்பு வெற்றி கொண்டு மழுங்கி, இப்போது வடித்துக் கூர்மையாக்கி வைத்திருக்கும் தன் உடைவாளை உருவி எடுத்தான்.
- அப்போது சந்தனம் பூசியிருந்த அவன் மார்பு துடித்தது.
- அகன்ற தோள்கள் துடித்தன.
- வேல் போன்ற விழிகள் துடித்தன.
- அவன் வலிமையை எண்ணிப் பார்க்காத பகை மன்னர்க்கு இடக்கண் துடித்தது.
- (ஆணுக்கு இடக்கண் துடித்தல் அவனுக்கு வரப்போகும் தீங்குக்கு அறிகுறி)
குறிப்பு
துடித்தன என்னும் சொல் பாடலின் இடைப்பகுதியில் நின்று பல பொருள்களைச் சார்ந்து பொருள் உணர்த்தியமையின் இது இடைநிலைக் குணத் தீவக அணி
தண்டியலங்காரம் PDF பக்கம் 107 | நூல் பக்கம் 82
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment