Pages

Friday, 30 May 2025

முதனிலைப் பொருள் தீவகம்

பாடலின் முதலில் நிற்கும் பொருள்-பெயர் பாடலின் பிற செய்திகளோடு இணைவது முதனிலைப் பொருள் தீவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

முருகவேள் சூர்மா முதல் தடிந்தான் வள்ளி
புரிகுழல் மேல் மாலை புனைந்தான் - சரண் அளித்து 
மேலாய வானோர் வியன் சேனை தாங்கினான்
வேலான் இடை கிழித்தான் வெற்பு.

பாடல் - செய்தி

முருகவேள் சூரபன்மனின் குலமுதலை அழித்தான்
முருகவேள் வள்ளிக்கு மாலை சூட்டினான் 
முருகவேள் வானவர்க்குப் பாதுகாப்பாக அரக்கர் படையைத் தடுத்து நிறுத்தினான்
முருகவேள் தன் வேலால் கிரவுஞ்ச மலையைக் கிளந்தான்

குறிப்பு

முருகவேள் என்பது ஒரு பொருள். இச்சொல் பாடலிலுள்ள பிறவற்றோடு இணைந்து கருத்தைப் புலப்படுத்துவதால் முதனிலைப் பொருள் தீவகம்

தண்டியலங்காரம் PDF பக்கம் 106 | நூல் பக்கம் 81
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment