Pages

Friday, 30 May 2025

முதனிலைச் சாதித் தீவகம்

சாதி என்பது ஒன்றன் இனப் பிரிவு. சாதிச்சொல் ஒன்று பாட்டின் முதலில் நின்று பாடலின் பிற சொற்களோடு இணைந்து பொருள் தருவது முதனிலைச் சாதித் தீவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

தென்றல் அனங்கன் துணை ஆம் சில கொம்பர் 
மன்றல் தலைமகன் ஆம் வான் பொருள் மேல் - சென்றவர்க்குச்
சாற்ற விடும் தூது ஆகும் தங்கும் பெரும் புலவி
மாற்ற வரு விருந்தும் ஆம்

பாடல் - செய்தி

தென்றல் காற்று காம உணர்வைத் தூண்டுதலால் காமனுக்குத் துணை ஆம்.
மலர்க்கொம்புகளில் பட்டு மணம் வீசுவதால் (மணப்பதால்) காதலியைக் கூடும் காதலன் ஆம். 
மகளிர் இறைவனிடம் விடும் தூது ஆம். 
ஊடும் மனைவிக்கு ஊடலைத் தீர்க்கும் விருந்து ஆம்

குறிப்பு

தென்றல் என்பது காற்றின் இனம். இச்சொல் பாடலின் முதலில் நின்று பிறவற்றோடு கூடிக் கருத்தைப் புலப்படுத்துவதால் முதனிலைச் சாதித் தீவகம்

தண்டியலங்காரம் PDF பக்கம் 106 | நூல் பக்கம் 81
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment