Pages

Friday, 30 May 2025

முதனிலைத் தொழில் தீவகம்

தொழிலைக் குறிக்கும் சொல் பாடலின் முதலில் நின்று பிறவற்றோடு கூடி நிகழ்வை விளக்குவது முதனிலைத் தொழில் தீவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

சரியும் புனை சங்கும் தண் தளிர் போல் மேனி 
வரியும் தன தடம் சூழ் வம்பும் - திரு மான 
ஆரம் தழுவும் தடந்தோள் அகளங்கன்
கோரம் தொழுத கொடிக்கு 

பாடல் - செய்தி

கோரம் - சோழனின் குதிரை
சோழன் தன் மீது உலா வந்தான்
தோளில் சந்தனம் பூசிக்கொண்டு வந்தான்
அந்தப் பெண் கொடி அந்தக் குதிரையைத் தொழுதாள்
(சோழன் காணத் தன் முன் நிற்கும்படித் தொழுதாள்)
அப்போது அவள் கையில் இருந்த சங்கு வளையல்கள் சரிந்தன
தளிர் போன்ற அவள் மேனி நலம் சரிந்தது
அவள் முலையில் கட்டியிருக்கும் வம்பு என்னும் ஆடை சரிந்தது

குறிப்பு

சரிதல் தொழில் பற்றிய சொல்
இது பாடலின் முதலில் நின்று,
கை வளையல் சரிந்தது
தளிர் மேனி மென்மை நலம் சரிந்தது
முலையில் இருக்கும் வம்பு சரிந்தது
பிற சொற்களோடும் கூடிப் பொருளை விளக்குவதால் இது முதனிலைத் தொழில் தீவகம்

தண்டியலங்காரம் PDF பக்கம் 105 | நூல் பக்கம் 80
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment