Pages

Friday, 30 May 2025

முதனிலைக் குணத் தீவகம்

குணத் தீவகம் பாடலின் முதலில் வருதல் 

பாடல் - எடுத்துக்காட்டு

சேந்தன வேந்தன் திருக்கண் தெவ்வேந்தர் 
ஏந்து தடந்தோள் இழி குருதி - பாய்ந்து
திசை அனைத்தும் வீரச் சிலை பொழிந்த அம்பும் 
மிசை அனைத்துப் புள் குலமும் வீழ்ந்து.

பாடல் - செய்தி

  • வேந்தன் கண் சினத்தால் சிவந்தது.
  • அதனால் போர் மூண்டு பகை வேந்தர் தோளிலிருந்து வழிந்த குருதி பாய்ந்து திசைகள் எல்லாம் சிவந்தன
  • குருதி உண்டாக வில்லிலிருந்து பாய்ந்த அம்பு சிவந்தது.
  • இறங்கிப் பிணம் தின்ற பறவைகளின் உடம்பும் சிவந்தது.   

குறிப்பு

  • சிவத்தல் என்பது நிறம் பற்றிய பண்புச் சொல். 
  • பாடலின் முதலில் நிற்கும் சிவந்தன என்னும் சொல் வேந்தன் கண், திசை, அம்பு, பறவைகள் சிவந்தன என்று கூடி அவற்றுக்கெல்லாம் ஒளி ஊட்டுதலால் இது முதனிலைக் குணத் தீவகம்

தண்டியலங்காரம் PDF பக்கம் 105 | நூல் பக்கம் 80
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
 

No comments:

Post a Comment