வீட்டில் வைக்கப்பட்டுள்ள விளக்கு வெளிச்சம் எல்லாப் பக்கமும் பரவுவது போல் பாடலில் உள்ள ஒரு சொல் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சேர்ந்து பொருள் தருவது தீவக அணி. இதனை விளக்கு அணி என்றும் கூறுவர்.
குணம், தொழில், சாதி, பொருள் குறித்த ஒரு சொல்லானது முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் விளக்காக நின்று பல இடங்களிலுள்ள சொற்களோடு இணைந்து பொருள் தரும்.
தீவகம் என்னும் சொல் தீவைக் குறிக்கும். கடலின் நடுவில் இருக்கும் தீவு போல் பாடலில் அமைவது தீவக அணி எனக் கொள்வதும் ஒன்று.
தண்டியலங்காரம் PDF பக்கம் 104 | நூல் பக்கம் 79
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment