நீலப் புருவம் குனிய விழி மதர்ப்ப
மாலைக் குழல் சூழ்ந்த நின் வதனம் - போலும்
கயல் பாய வாசம் கவரும் களி வண்டு
அயல் பாய அம்பேருகம்
கயல்மீன் பாய
களிக்கும் வண்டு மணத்தைக் கவர
அயலே மலரும் தாமரையானது
நீல நிறப் புருவம் குனிய
விழி மதர்ப்ப
குழல் மாலைக்கு நடுவில் தோன்றும் உன் முகம்
இருக்கும்.
பாயும் மீன் மோதித் தாமரை மலரும் எனல்
இப்பாடலில் உள்ள மிகைச் செய்தி
இப்படி அறிஞர் பாடினால் குற்றம்
சான்றோர் செய்யுளில் காணப்பட்டால் அது ஏற்கப்படும்
தண்டியலங்காரம் PDF பக்கம் 84
தமிழ்வளப் பாடல்கள் -- பாடலில் அணிகள் - அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment