Pages

Sunday, 25 May 2025

தண்டியலங்காரம் - குறை உவமை

உவமை
பொருள்
பொருத்தத்தில்  
குறைபாடு உடையது
குறை உவமை

நாட்டம் தடுமாறச் செவ்வவாய் நலம் திகழத்
தீட்டடரிய பாவை திருமுகம் - காட்டுமால்
கெண்டை மீது ஆட யறுஞ் சேயிதழ் கிளர
வண்டு சூழ் செந்தாமரை

அவள் திருமுகம்

அவள் பார்வை தடுமாறுகிறது
சிவந்த வாய் அழகைக் காட்டுகிறது
அவள் முகம் எழுதமுடியாத ஓவியம் போலத் திகழ்கிறது 

அவள் முகம் போல இருக்கும் செந்தாமரை

கெண்டை தாமரை மேல் ஏறி விளையாடுகிறது
அதனால் அதனால் தாமரையின் இதழ்கள் விரிகின்றன

இந்தப் பாடலில் கெண்டை விளையாடுவதால் தாமரை இதழ் விரியும் என்னும் செய்திக்கு ஏற்ற தொடர்பு முகத்தில் இல்லை 

எனவே இது குறையுள்ள உவமை.

இப்படி அறிஞர் பாடினால் குற்றம்
சான்றோர் செய்யுளில் காணப்பட்டால் அது ஏற்கப்படும்

தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment