Pages

Sunday, 25 May 2025

தண்டியலங்காரம் - தாழ்தல் முதலான மாறுபாடு

இப்படிப் பாடினால்

மன்னவர்க்கு நாய் போல் வனப்புடையார் வாள் மறவர்
மின்மினியும் வெண் சுடரோன் போல் விளங்கும் - அன்னப்
பெடை போலும் சந்திரன் பைந்தடங்கண் போலும் 
மிடை மாசு இல்லா விசும்பு

மன்னனைக் காக்கும் வாள்மறவர் 
நாய் போன்றவர்
வனப்பு உடையவர்

மின்னும் பூச்சி வெண்சுடர் சூரியன் போல் ஒளிரும்

நிலாவின் வெள்ளை நிறம் அன்னப்பறவை நிறம் போல உள்ளது

மாசில்லா வானம் மகளிர் பைந்தடங்கண் போல இருக்கிடது

இந்தப் பாடலில் 
தாழ்தல், 
உயர்தல், 
பால் மாறுபடுதல்
முதலான குறைகள் 
இருப்பதைக் கண்டுகொள்க 

இப்படி அறிஞர் பாடினால் குற்றம்
சான்றோர் செய்யுளில் காணப்பட்டால் அது ஏற்கப்படும்

தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment