பல ஓடைகளிலிருந்து வரும் நீர் ஒரு குளத்தில் ஒன்றாகி நிற்பது போல, பல பாடல்கள் ஒரு முடிவினைக் கொண்டு ஒரு வாக்கியமாகத் திகழ்வது குளகம்.
'முன்புலகம் ஏழினையுந் தாயதுவு மூதுணர்வோர்
இன்புறக்கங் காநதியை யீன்றதுவும் - நன்பரதன்
கண்டிருப்ப வைகியதுங் கான்போ யதுமிரதம்
உண்டிருப்பா ருட்கொண் டதும் '
'வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும்
அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் - செந்தமிழ்தேர்
நாவலன்பின் போந்ததுவும் நன்னீர்த் திருவரங்கக்
காவலவன் மாவலவன் கால்'
திருவரங்கக் காவலனும், பாரதப் போரில் தேரோட்டியவனுமாகிய திருமாலின் கால்கள்
1
- மாவலியிடம் மூன்றடி மண் வேண்டிப் பெற்று உலகம் ஏழினையும் தாவி யளந்ததும் ,
- அருளுணர்ச்சி யுடையவர்கள் இன்புறுமாறு கங்கையை ஈன்றதுவும் ,
- நன்மைகள் அனைத்திற்கும் இருப்பிடமாகிய பரதன் நந்திக் கிராமத்தில் பதினான்கு ஆண்டுகள் வரை கண்டு இன்புறுமாறு வைகியதுவும் ,
- தந்தையின் ஏவவால் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் சென்றுவந்ததுவும் ,
- அமிழ்தத்தை யுண்பவரான தேவர்கள் எப்பொழுதும் நினைந்து வணங்குதற்குரியதுவும் ,
2
- உபமந்நிய முனிவரின் மனைவி வயிற்றிலிருந்து சாபத்தால் பிறந்த கரிக்கட்டையை அச்சாபம் நீங்கப் பிள்ளையாய் உருக்கொள்ளுமாறு செய்ததுவும் ,
- கணவனின் சாபத்தால் கல்லாய்க் கிடந்த அகலிகையைச் சாபம் நீங்கப் பெண்ணாய் உருக்கொளச் செய்ததுவும் ,
- செந்தமிழை நன்கு கற்றுத் தேர்ந்த திருமழிசை யாழ்வாரின் பொருட்டுக் காஞ்சியை விட்டு அகன்றதுவும்
ஆன சிறப்பினையுடையன.
முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்று செய்யுன் 4 வகை
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment