Pages

Saturday, 17 May 2025

முத்தகம்

'என்னேய் சிலமடவார் எய்தற்கு எளியவோ
பொன்னே அனபாயன் பொன்னெடுந்தோள் - முன்னே
தனவேயென் றாளுஞ் சயமடந்தை தோளாம்
புனவேய் மிடைந்த பொருப்பு '

  • வெற்றிச் செல்விக்குக் காட்டு மூங்கில் போன்ற தோள்களில் மலை போல் இரண்டு  முலைகள். 
  • சோழன் தோள் பொன் போன்றது 
  • அதனை அவள் தனது செல்வம் என்று  ஆள்கிறாள் 
  • என்னைப் போன்ற சாதாரண சில பெண்கள் அதனை அடைய முடியுமா

  • தனித்து ஒளிறும் முத்தைப் போல இந்தப் பாடலில் கருத்து முற்றுப்பெற்றிருப்பதால் இது முத்தகச் செய்யுள். 
 
முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்று செய்யுன் 4 வகை 


மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment