Pages

Tuesday, 20 May 2025

தன்மை அணி - குணம்

ஒருவர் உணர்வில் தோன்றும் பண்புகளை விளக்குவது குணத்தன்மை

உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்து உரையும் 
தள்ள விழி நீர் அரும்பத் தன் மறந்தாள் - புள் அலைக்கும்
சேந்தாமரை வயல் சூழ் தில்லைத் திருநடம் செய்
பூந்தாமரை தொழுத பொன்  

  • அவன் பொன் போன்றவள்
  • தில்லையில் நடனம் ஆடுபவனைத் தொழுதாள்
  • தாமரையைப் பறவைகள் கோதும் வயல்களைக் கொண்டது தில்லை 
  • தொழுதவள் உள்ளம் குளிர்ந்தது
  • அவள் உடம்பில் இருக்கும் மயிர்கள் சிலிர்த்தன 
  • அவள் உரை தடுமாறியது 
  • கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்பிற்று
  • அவள் அவன் நினைவில் தன்னையே மறந்தாள்.

எந்தப் பொருளாய் இருந்தாலும் அதன் மெய்மைக் கூறுகளை விளக்குவது தன்மை அணி

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு 

No comments:

Post a Comment