இது பொருளின் தன்மையை விளக்கும் பாடல்
சிவன் தன்மையை விளக்குகிறது
நீல மணி மிடற்றன் நீண்ட சடை முடியன்
நூல் அணிந்த மார்பன் நுதல் விழியன் - தோல் உடையன்
கைம்மான் மறியன் கனல் மழுவன் கச்சாலை
எம்மான் இமையோர்க்கு இறை
- கச்சாலை எம்மான் இமையோர்க்கும் இறைவன்
- அவன் நீல நிற மணி போன்ற மிடற்றினை உடையவன்
- நீண்ட சடைமுடி கொண்டவன்
- மார்பில் பூணூல் அணிந்திருப்பான்
- அவன் நெற்றியிலும் கண் இருக்கும்
- தோலாடை கட்டியிருப்பான்
- கையில் மான்குட்டி, தீச்சட்டி, மழு வைத்திருப்பான்
எந்தப் பொருளாய் இருந்தாலும் அதன் மெய்மைக் கூறுகளை விளக்குவது தன்மை அணி
தண்டியலங்காரம் PDF பக்கம் 57
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment