இது பாம்புச் சாதியின் (இனத்தின்) தன்மையைக் கூறும் பாடல்
பத்தித் தகட்ட கறை மிடற்ற பை விரியும்
துத்திக் கவை நாத் துளை எயிற்ற - மெய்த் தவத்தோர்
ஆகத்தான் அம்பலத்தான் ஆரா அமுதணங்கின்
பாகத்தான் சாத்தும் பணி
- தவ மேனி கொண்டவன்
- அம்பலத்தில் ஆடுபவன்
- உண்ணப்படாத அமுதமாக விளங்கும் உமையைப் பாகமாக உடையவன்
- (சிவன்)
- அவன் அணிந்திருக்கும் பாம்பு
- ஈரமான தகடு போன்ற மேனி கொண்டது
- நஞ்சு இருக்கும் தொண்டை கொண்டது
- படம் விரிப்பது
- மேனியில் புள்ளிகளைக் கொண்டது
- பிளந்த நாக்கினைக் கொண்டது
- நஞ்சு கக்கும் துளை கொண்ட பல்லை உடையது
எந்தப் பொருளாய் இருந்தாலும் அதன் மெய்மைக் கூறுகளை விளக்குவது தன்மை அணி
தண்டியலங்காரம் PDF பக்கம் 59
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment