Pages

Tuesday, 20 May 2025

தன்மை அணி - தொழில்

வண்டு செய்யும் தொழிலை விளக்கும் பாடல்
இது தொழில் தன்மை

சூழ்ந்து முரன்று அணவி வாசம் துதைந்து ஆடி 
தாழ்ந்து மது நுகர்ந்து தாது அருந்தும் - வீழ்ந்த பெரும்
பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை
வாசத் தார் நீங்காத வண்டு. 

சிவனின் கொன்றை மாலையை நீங்காத வண்டு அந்த மாலையை,
சுற்றும்
முரலும் / பாடும்
மேலே எழும்பும்
வாசத்தில் மூழ்கி ஆடும்
பூவில் அமரும்
அதில் உள்ள தேனை உண்ணும்
பூந்தாதுகளைத் தின்னும்

இவை வண்டு செய்யும் தொழில்கள் 

எந்தப் பொருளாய் இருந்தாலும் அதன் மெய்மைக் கூறுகளை விளக்குவது தன்மை அணி

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment