Pages

Wednesday, 21 May 2025

இதரவிதர உவமை

ஒருமுறை உவமை பொருளாகவும், மீண்டும் பொருள் உவமையாகவும் மாறி வருவது இதரவிதர  உவமை

களிக்கும் கயல் போலும் நும் கணும் கண் போல்
களிக்கும் கயலும் கனி வாய்த் - தளிர் கொடியீர்
தாமரை போல் மலரும் நும் முகம் நும் முகம் போல்
தாமரையும் செவ்வி தரும்

  • கோவைப்பழம் போலும் வாயுடன் தளிர்க்கும் கொடி போன்றவளே!
  • கயல் மீன் போல உன் கண் பிறழ்கிறது
  • உன் கண் போலக் கயல் பிறழ்கிறது
  • தாமரை மலர் போல் உன் முகம் மலர்கிறது
  • உன் முகம் போலத் தாமரை மலர்கிறது
தளி பெற்று வைகிய தண் சுனை நீலம்
அளி பெற்றார் கண் போல் அலரும் -  அளி பெற்ற
நல்லார் திருமுகத்து ஆற்ற நளிர் பெற்ற
கல் ஆரம் போல் போல் மலரும் கண்

  • சுனையில் இருக்கும் நீல மலர் காதலன் பாராட்டைப் பெற்ற காதலியின் கண் போல் பூக்கும் 
  • காதலன் பாராட்டைப் பெற்ற காதலி முகம் குளிர்வது போலவும்
  • கல்லில் தேய்த்துப் பூசிய சந்தனம் குளிர்வது போலவும்
  • காதலன் பாராட்டைப் பெற்ற காதலி  கண்ணும் மலரும்

உவமை வகைகள்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment