Pages

Wednesday, 21 May 2025

சமுச்சய உவமை

இதனை ஒப்பது இதனால் அன்றி இதனாலும் ஒக்கும் என்று கூறுதல் சமுச்சய உவமை

அளவே படிவு  ஒப்பது அன்றியே பச்சை
இளவேய் நிறத்தானும் ஏய்க்கும் - துள வேய்
கலைக்குமரி போர் துளக்கும் கார் அவுணர் வீரம் 
தொலைக்குமரி ஏறு உகைப்பாள் தோள்
  • (கொற்றவை)
  • துளசி மாலை அணிந்த கலைக்குமரி
  • போரில் ஆட்டிப் படைக்கும் கரு நிற அவுணர் வீரத்தைத் தொலைக்கும் குமரி
  • சிங்கத்தின் மேல் வருபவள் 
  • அவளுடைய தோள் 
  • மூங்கிலை
  • அளவாலும்
  • கணுக்களுக்கு இடையே உள்ள படிவாலும் 
  • பச்சை நிறத்தாலும்
  • ஒத்திருக்கும்.
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment