Pages

Saturday, 17 May 2025

பெருங்காப்பியம்

பெருங்காப்பியம் என்பது பொருள்-தொடர்நிலைச் செய்யுள்


வாழ்த்துதல், வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் ஆகிய மூன்றனுள் ஒன்றை முதலில் சொல்லித் தொடங்கும். 
  1. சிலப்பதிகாரம் இயற்கையை வாழ்த்தித் தொடங்குகிறது 
  2. கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகியவை தெய்வத்தை வணங்கித் தொடங்குகின்றன
  3. மொழி வரலாற்றைக் கூறும் தொல்காப்பியம் உரைக்கும் பொருளை முன்னே உணர்த்தித் தொடங்குகிறது.
அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நான்கினையும் பயக்கும் ஒழுக்கத்தை உரைக்க வேண்டும்.

ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனைத் தலைவனாகக் கொண்டிருக்க வேண்டும் 

மலை, கடல், நாடு, நகரம், பருவகாலம், ஞாயிறு திங்கள் தோற்றம் முதலான வருணனைகள் இருக்க வேண்டும். 

திருமணம், முடி சூடுதல், பூம்பொழில் நுகர்தல், புனலில் விளையாடல், மக்களைப் பெறுதல், புலவி, கலவி முதலா செய்திகளைக் கூற வேண்டும்

மந்திரம் என்னும் எதிர்பாராத திருப்பம், தூது விடுதல், போருக்குச் செல்லல், போர், வெற்றி போன்ற செய்திகளைச் சொல்ல வேண்டும் 

சந்தி, சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் என்னும் பகுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்

சுவை உணர்வையும், பாவம் என்னும் உணர்ச்சி வெளிப்பாட்டையும் உண்டாக்கக்கூடிய கற்றவரின் புனைந்துரை இருக்க வேண்டும். 

இப்படி அமைவது பெருங்காப்பியம். 

இந்த உறுப்புகளில்  சில குறைந்து வந்தாலும்  பெருங்காப்பியம் என ஏற்றுக்கொள்ளப்படும். 

முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்று செய்யுன் 4 வகை 

மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment