அறம், பொருள், இன்பம், வீடு என்பவை 4 பொருள். இந்த நான்கும் வரப் பாடப்பட்ட நூல் பெருங்காப்பியம்.
இவற்றில் ஒன்றோ சிலவோ இல்லாமல் பாடப்பட்ட நூல் காப்பியம். அதாவது சிறுகாப்பியம்.
இதனைச் சிற்றிலக்கியம், பிரபந்தம் என்றும் குறிப்பிடுகிறோம்.
இது ஒரே வகையான பாடலாலும், பல வகையான பாடல்களாலும், உரையடை இடையில் வருமாறும் இயற்றப்பட்டிருக்கும்.
ஒருதிறப்பாட்டால் வந்த காப்பியம்
- நளவெண்பா
- பாரத வெண்பா முதலியன .
பலதிறப்பாட்டால் வந்தன
- பெரிய புராணம் ,
- கம்பராமாயணம் முதலியன .
உரையும் பாட்டும் விரவிவந்தன
- தகடூர் யாத்திரை முதலியன.
முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்று செய்யுன் 4 வகை
தண்டியலங்காரம் நூற்பா 10, 11
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment