முன் உள்ள செய்யுளோடு பின் உள்ள செய்யுளுக்குத் தொடர்பு யாதும் இல்லாமல் தனித்தனியே ஒரு பொருளை உணர்த்தும் செய்யுட்கள் பல விரவி வரத் தொகுக்கப்பட்ட நூல் தொகைநிலைச் செய்யுள்
முன் உள்ள செய்யுளோடு பின் உள்ள செய்யுளுக்குச் சொல்லினாலோ , அன்றிப் பொருளினாலே தொடர்புடைய நூல் தொடர்நிலைச் செய்யுள்
- பொருளினால் தொடர்தல்
- சொல்லினால் தொடர்தல்
- பொருளினாலும் சொல்லினாலும் தொடர்தல்
பொருள் தொடர்நிலைச் செய்யுள்
- பெரிய புராணம் ,
- கம்பராமாயணம்
சொல் தொடர்நிலைச் செய்யுள்
- திருச்சதகம்,
- அந்தாதி ,
- கலம்பகம்
சொற்பொருள் தொடர்நிலைச் செய்யுள்
- திருவாசகத்திலுள்ள திருச்சதகத்திற்குச் சொல்லினால் அன்றிப் பொருளினாலும் ஒன்றற்கொன்று தொடர்பு உளதாதலைச் சான்றோர் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர் . இதனை நோக்குழி இந்நூல் சொற்பொருள் தொடர்நிலைச் செய்யுள் என உணரலாம் .
முத்தகச் செய்யுள், குளகச் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்று செய்யுன் 4 வகை
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment